வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (16:39 IST)

ஜெயக்குமார் 7 நாள் காவலில் எடுத்து விசாரணை..

டி.என்.பி.எஸ்.சி. முறைக்கேடு வழக்கில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சரணடைந்த நிலையில், சிபிசிஐடி 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 மற்றும் குரூப் 2 முறைக்கேடு தொடர்பாக இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இடைத்தரகர் ஜெயக்குமார் என்பவரை சிபிசிஐடி போலீஸார் வலை வீசி தேடி வந்தனர்.

இதனை தொடர்ந்து இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். ஜெயக்குமாரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் சிபிசிஐடி அனுமதி கோரியது. இந்நிலையில் ஜெயக்குமாரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.