1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (13:48 IST)

”குடி“மக்கள் கவனத்திற்கு; இன்று முதல் மதுபான விலை உயர்வு அமல்

கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் இன்று முதல் மதுபான விலை உயர்வு அமலுக்கு வந்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது மதுபானங்களின் விலை உயர்வு இன்று அமலுக்கு வந்தது.

அதன் படி தற்போது விற்கும் விலையுடன் குவாட்டர் ரூ.10ம், ஹாஃப் ரூ.20ம், ஃபுல் விலை ரூ.40ம் உயர்ந்துள்ளது. பீர் பாட்டில் 10 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டிற்கு வருவாய் ரூ.2,200 கோடி கூடுதலாக கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.