செவ்வாய், 9 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2024 (18:12 IST)

திமுக மீது பா ரஞ்சித் வைத்த குற்றசாட்டுகளை அவரே திரும்ப பெற்றுக்கொள்வார்: பிரபல நடிகர்..!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நெருக்கமான இயக்குனர் பா ரஞ்சித் தனது சமூக வலைதள பக்கத்தில் திமுக மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டு வைத்திருந்தார் என்பதும் அதனால் பரபரப்பு ஏற்பட்டது என்பது தெரிந்தது.
 
நேற்று தனது சமூக வலைதளத்தில் திமுக அரசுக்கு ஏழு கேள்விகளை பா ரஞ்சித் முன்வைத்த நிலையில் இந்த கேள்விக்கு அரசு பதில் அளிக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் வாக்கு அரசியல் மட்டும் தான் சமூக நீதியா என்று அவர் கேள்வி எழுப்பியது பலரை ஆச்சரியப்பட செய்தது. 
 
இந்த நிலையில் திமுகவில் உள்ள சிலர் ரஞ்சித்தின் கேள்விகளுக்கு பதிலடி கொடுத்து வரும் நிலையில் தற்போது நடிகர் மற்றும் இயக்குனர் போஸ் வெங்கட் இது குறித்து தனது கருத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
 
தோழர் ரஞ்சித் அண்ணனை இழந்த வேதணையில் வெளிவந்த வார்த்தைகளாக அந்த பதிவை எடுத்துக்கொள்கிறேன்..  மற்றபடி திமுக மீது அவர் வைத்த குற்றசாட்டுகளை அவரே திரும்ப பெற்றுக்கொள்வார் என நம்புகிறேன்.
 
Edited by Mahendran