1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2024 (08:18 IST)

பா ரஞ்சித் கேட்ட 7 கேள்விகளுக்கு பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்.. பதில் வருமா?

இயக்குனர் பா ரஞ்சித் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து தனது சமூக வலைதளத்தில் ஏழு கேள்விகள் கேட்டிருந்த நிலையில் இந்த கேள்விகளுக்கு நெட்டிசன் ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிலடி கேள்விகள் இதோ:
 
1. ஆம்ஸ்ட்ராங் உடன் எப்பொழுதும் 10-15 நபர்கள் கூடவே இருப்பார்கள் என கூறப்படுகிறது.மாலை/முன்னிரவு தான்.நள்ளிரவு கூட இல்லை.படுகொலை நடந்த அன்று ஏன் இல்லை.?
 
2. அவர் விலையுயர்ந்த நவீன ரக துப்பாக்கி வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே.எதிரிகளுக்கும் தெரிந்து தான் இருக்கும்.அருகில் வர பயம் இருக்கும்.
ஆனால் வீட்டில்/வாசலில் நிற்கும் போது அவருடன் துப்பாக்கி இருக்காது என நெருக்கமானவர்கள் தவிர வேறு யாருக்கு தெரிந்திருக்கும் ? அது எப்படி கொலையாளிகளுக்கு தெரிந்தது.
 
3. குடியிருப்பு பகுதி,மக்கள் தொகை அடர்த்தியான பகுதி, சிறிய அளவிலான அலுவலகம் இடம். இந்த இடத்தில் அடக்கம் செய்தால் அங்கு வசிக்கும் மக்களுக்கு அல்லாமல் வேறு யாருக்கு இடைஞ்சலாக இருக்கும்.? மேலும் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மிகுந்த ஒத்துழைப்பும் உதவியும் செய்ததாக ஆம்ஸ்ட்ராங் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். உண்மை இவ்வாறு இருக்கும் போது tool kit பரப்பும் அதே அவதூற்றை நீங்களும் கையில் எடுத்திருப்பதின் நோக்கம் என்ன?
 
4. சரணடைந்தவர்கள் மற்றும் கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலம் மட்டுமன்றி இந்த கொலைக்கான motivation, இந்த கொலைக்கு முன்னால் நடந்த கொலைகள் மற்றும் அதன் பின்னணி  வழக்குகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முதற்கட்ட விசாரணை அடிப்படையில் காவல்துறை சார்பில் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதெல்லாம் ஆரம்ப கட்டம் தான். திட்டமிட்டு ஏவியவர்கள், அவர்களை இயக்கியவர்கள், வேறு பின்னணி ஏதும் உள்ளதா !இதற்குப் பின்னால் ஆருத்ரா இருக்கிறதா என்பது குறித்தெல்லாம் காவல்துறையின் அடுத்தடுத்த கட்ட விசாரணையில் மேலும் விபரங்கள் வெளிவரத்தான் போகிறது. ஆனால் tool kit கும்பலுடன் இணைந்து அவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்ற தொனியில் உங்கள் கேள்வியும் உள்ளது,அப்படி என்றால் உண்மையான குற்றவாளிகளாக யாரை கருதுகிறீர்கள்/றார்கள் ? சந்தேகம் எழுபபும் யாரும் வேறு எதனால் என பேச மறுப்பது ஏன் ? திசை திருப்ப முயற்சிக்கும் tool kit கும்பலுக்கு நீங்களும் துணை போவது ஏன் ?
 
5. படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் தலித் தலைவர் தான். கொலை செய்த ஆற்காடு சுரேஷ் தம்பி மற்றும் கும்பல் தலித்துகள் என கூறப்படுகிறது. கொல்லப்பட்டவர் தலித் என சுட்டிக்காட்டுபவர்கள் யாரும் இந்த படுகொலையைச் செய்தவர்கள் தலித் என கூற மறுப்பது ஏன்?
 
6. திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகளும் உள்ளடக்கம் என்பது உண்மை தான். திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவை தலித்துகள் கொடுத்து வருவதற்கான மிக முக்கிய காரணம் திமுக முன்னெடுத்த சமூகநீதி தானே தவிற வேறில்லை. மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. யார் ஒடுக்கப்பட்டர்களுக்கானவர்கள் சமூகநீதியின்பால் செயல்படுகிறார்கள் என பார்த்து பகுத்தறிந்தே வாக்களிக்கிறார்கள். திமுக தலித்துகளுக்கு எதிரி என்பதுபோல அவதூறுகள் மூலம் கட்டமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்துள்ளன.(சமூகநீதியி்ல் திமுகவின் பங்கு குறித்து தனியாக எழுதலாம்).
 
7, படுகொலைக்கு பிறகு எந்த அசம்பாவிதம் கலவரம் நடக்காமல் சட்டம் ஒழுங்கு கெடாமல் கட்டுக்குள் வைத்தது தமிழ்நாடு அரசு. படுகொலை நடந்ததும் சில மணித்துளிகளில்  எந்தவிதமான விபரங்கள் வெளிவரும் முன்னர் மட்டுமின்றி ஆரம்பகட்ட விபரங்கள் ஓரளவு வெளிவந்த பின்னரும் கூட திட்டமிட்டு ஒரு மாபியா கும்பல் சமூகவலைதளங்களிலும் சில ஊடகங்கள் மூலமும் திமுகவை குற்றவாளியாக்கும் முயற்சியில் பல அவதூறுகளையும் பொய்களையும் அள்ளிவீசி திமுக தலித்துகளுக்கு எதிரி என ஒரு Narrative செட் செய்ய களம் இறங்கியது.அதை எந்த ஒரு திமுககாரன்/திமுக அனுதாபி/சமூகநீதியால் பலன் பெற்ற எவனும் வேடிபார்த்துக் கொண்டு இருக்க மாட்டான்.அதற்கான எதிர்வினைகள் எதிர் கேள்விகள் எழத்தான் செய்யும்.ஏன் அவ்வாறு எழுப்பப்படும் கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லையா ?  கேள்விகள் மூலம் அம்பலப்படும் என்ற பதட்டமா ?
 
 
Edited by Siva