வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2024 (14:02 IST)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பிய தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம்..!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக தமிழக டிஜிபிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸில் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் விசாரணை நிலவரம் என்ன என்று ஆணையம் கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நோட்டீஸ் தமிழக தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கும் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
 
கடந்த 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நிலையில் செய்திகள் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோட்டீசுக்கு டிஜிபி மற்றும் தலைமை செயலாளர் தரப்பில் இருந்து விரைவில் பதில் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி உள்பட 11 பேர் இதுவரை கைது  செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு குறித்து விசாரணை செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த சம்பவம் எதிரொலியாக சென்னை கமிஷ்னரும் மாற்றம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran