வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2024 (12:24 IST)

கேள்வி மேல் கேள்வி கேட்ட பா ரஞ்சித்துக்கு திமுக பிரபலம் பதிலடி..!

saravanan
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த படுகொலை குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பா ரஞ்சித் சமூக வலைதள பக்கத்தில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு ஏழு கேள்விகளை கேட்டிருந்தார். இந்த நிலையில் இந்த கேள்விக்கு திமுகவின் சரவணன் அண்ணாதுரை பதிலடி கொடுத்துள்ளார். அவர்  தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது:
 
திமுகவை தலித் மக்களின் நலன்களுக்கு எதிரான கட்சி என கட்டமைக்க பாஜக வெகு காலமாக முயன்று வருகிறது. அதிலே படுதோல்வியைத் தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது, சந்திக்கவும் போகிறது. 
 
அண்ணன் திரு. ஆம்ஸ்டிராங்க் அவர்கள் கொலை என்ன காரணத்திற்காக நடந்திருக்கிறது, யாரெல்லாம் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள்  என விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போதே, திமுகவின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார் அண்ணன் பா. ரஞ்சித் அவர்கள். 
 
அண்ணன் பா. ரஞ்சித் அவர்களுக்கு முக்கிய கேள்வி? 
 
இந்த வழக்கில் விசாரண முடியவில்லை, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை, அதற்குள் போலிசார் கொலைக்கு இதுதான் காரணம் என முடிவு செய்துவிட்டார்களா என எந்த அடிப்படையில் கேள்வி எழுப்புகிறீர்கள்? விசாரணையின் போக்கை வெளியில் சொல்ல மாட்டார்கள், சொல்லக் கூடாது என்ற அடிப்படை தெரியாதவரா தாங்கள்? 
 
ஒடுக்கப்பட்டவர்களின் விடி வெள்ளியாய் செயல்படும் திமுகவின் மீது தலித் மக்களின் நலனுக்கெதிரானவர்கள் என்ற போலி பிம்பம் இந்த சம்பவத்திற்கு பின்னர் பல மடங்கு வீரியத்துடன்   சமூக வலைத்தளங்களில் கட்டமைக்கப்படுகிறதே அது தங்களுக்கு தெரியவில்லையா? அந்த போலி பிம்பத்தை உறுதிப்படுத்தவே இந்த பதிவா? 
 
தமிழ் நாட்டின் காவல்துறை சிறப்பான அமைப்பு. இந்த வழக்கில் எல்லா குற்றவாளிகளையும் கண்டறிந்து, அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரக்கூடிய வல்லமை பெற்றவர்கள்
 
Edited by Mahendran