ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : திங்கள், 28 அக்டோபர் 2019 (09:42 IST)

”அரசை குறை சொல்ல இது நேரமில்லை”..வைரமுத்து ஊக்கம்

சுர்ஜித்தை மீட்பதற்கான போராட்டம் நடைபெற்றுகொண்டிருக்கும் நிலையில், கவிஞர் வைரமுத்து, “இது அரசு எந்திரத்தையோ, ஆழ்துளை எந்திரத்தையோ” குறை சொல்லும் நேரமில்லை” என கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளை கிணற்றில் விழுந்ததையடுத்து, குழந்தையை உயிருடன் மீட்பதற்காக 4 நாட்களாக போராடி வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது ஆழ்துளை கிணறு அருகே ஒரு சுரங்கம் தோண்டி, குழந்தையை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “அரசு எந்திரத்தையோ, ஆழ்துளை எந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை, குழந்தையை மீட்பதே நமது குறிக்கோள் என கூறியுள்ளார்.

மேலும், கடினமாக பாறைகள் இருப்பதால் தோண்டும் பணி தாமதமானதை குறித்து, “பாறை என்பது நல்வாய்ப்பு,மண்சரியாது, தடைக்கல்லை படிக்கல்லாக்கி முன்னேறுவோம்” என ஊக்கம் அளித்துள்ளார்.

நள்ளிரவில் ரிக் என்ற இயந்திரம் வரவழைக்கப்பட்டு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தீடீரென இயந்திரம் பழுதானதை தொடர்ந்து, இரண்டாவது இயந்திரம் கொண்டுவரப்பட்டு அதிகாலை 4 மணி முதல் தோண்டும் பணியை ஆரம்பித்தனர்.

மேலும் கடினமான பாறையை உடைக்க சென்னையிலிருந்து ஆகாஷ் என்ற புதிய டிரில் இயந்திரம் வரவழைக்கப்படுகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.