1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Booster dose vaccine camp tomorrow

தமிழகம் முழுவதும் நாளை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்!

தமிழகம்
நாளை முதல் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் செஉத்த சிறப்பு முகாம் நடத்தப்படும். 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கடந்த செப்டம்பர் மாதம் முதலாக தமிழக அரசு கொரோனா தடுப்பூசி முகாமை வாரம்தோறும் நடத்தி வருகிறது. 
 
மெகா தடுப்பூசி முகாம் இல்லாவிட்டாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு எந்த தடையும் ஏற்படவில்லை. இதனிடையே தற்போது பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்த வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
 
அதன்படி நாளை முதல் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் செஉத்த சிறப்பு முகாம் நடத்தப்படும். வழக்கம் போல சனிக்கிழமைகளை முதல் மற்றும் இரண்டாம் டோஸ் செலுத்திக்கொள்ள தடுப்பூசி முகாம் நடத்தப்படும். 
About Writer
Sugapriya Prakash