1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN Political party meeting about dam issues

மேகதாது அணை விவகாரம்; அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!

Tamilnadu
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விடாபிடியாக முயன்று வருவது தொடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு மேகதாது அணைக்கு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக அரசு அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் மேகதாது அணை விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வது மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து இன்று திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் அதிமுக, பாமக, விசிக, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதில் மேகதாது அணை விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
கலைக்கப்பட்டது ரஜினி மக்கள் மன்றம்!? – ரஜினி அறிவிப்பால் அதிர்ச்சி!