வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 மார்ச் 2021 (15:12 IST)

தாராபுரத்தில் எல்.முருகன்.. காரைக்குடியில் எச்.ராஜா! – பாஜக ஸ்டார் வேட்பாளர் பட்டியல்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை தற்போது வெளியிட்டு வருகிறது. 

அதன்படி பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தாராபுரம் தொகுதியிலும், துணை தலைவர் அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியிலும், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா காரைக்குடி தொகுதியிலும், சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பூ ஆயிரம் விளக்கு தொகுதியிலும், மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கிலும், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தியும் போட்டியிடுகின்றனர்.