திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 மார்ச் 2021 (11:26 IST)

இன்னும் 5 எக்ஸ்ட்ரா வாக்குறுதிகள்; திமுக அறிவிப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை திமுக வெளியிட்டிருந்த நிலையில் புதிதாக 5 வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. கல்வி, மருத்துவம், பெண்களுக்கான வேலைவாய்ப்பு என 500க்கும் மேற்பட்ட திட்டங்கள் குறித்த தேர்தல் அறிக்கையாக அது இருந்தது. இந்நிலையில் அதில் விடுபட்ட மேலும் 5 முக்கிய வாக்குறுதிகளை திமுக தற்போது அறிவித்துள்ளது.

அவையாவன,
1. திமுக ஆட்சிக்கு வந்ததும் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அனுமதி அளிக்கப்படாது
2. சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படாது
3. இந்திய குடியுரிமை சட்டம் 2019ஐ திரும்ப பெற வலியுறுத்தப்படும்
4. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்
5. மத்திய அரசு வெளியிட்ட சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020 நிராகரிக்கப்படும்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.