ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2024 (07:28 IST)

இன்னும் சில மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Chennai Rain
தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை மற்றும் அதிக கனமழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் அதாவது நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

இந்த நிலையில் கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva