வியாழன், 10 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஜூலை 2024 (16:50 IST)

3 கொலைகளும் அரசியல் கொலை கிடையாது.. பொய் சொல்கிறார் அன்புமணி: திமுக பிரமுகர்

saravanan
நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் மூன்று அரசியல் கொலைகள் நடந்ததாக எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை, அன்புமணி உள்ளிட்டோர் கூறிய நிலையில் திமுகவின் சரவணன் அண்ணாதுரை இதை மறுத்து இந்த கொலைகள் எதற்காக நடந்தது என்பதை விரிவாக கூறியுள்ளார். அவர் இது குறித்து தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
 
 
இவை எதுவுமே அரசியல் படுகொலைகள் கிடையாது. அரசியல் காரணங்களுக்காக அப்பட்டமாக பொய் சொல்கிறார் அன்புமணி ராமதாஸ் அவர்கள்.  
 
1. பாஜக பிரமுகர் செல்வகுமார், ஒரு கொலை வழக்கில் பஞ்சாயத்து செய்ய முயற்சித்த விரோதத்தால் கொல்லப்பட்டார். அவர் மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது. 
 
2.அதிமுக பிரமுகர் பக்தா என்ற பத்மனாபன்  கொலை புதுச்சேரியில் நிகழ்ந்தது, தமிழ் நாட்டில் அல்ல. அவர் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டார். 
 
3. கன்னியாகுமரியில் ஏற்கெனவே நடந்த வாய் தகராறினால் ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக ஜான்சன், காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் கொல்லப்பட்டார். 
 
இந்த எல்லா வழக்குகளிலும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை துரித நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிற திமுக அரசு மீது அரசியல் கொலைகள் நடக்கின்றன என அவதூறு பரப்பி வருகின்றனர் எதிர்க்கட்சியினர்.
 
இவ்வாறு சரவணன் அண்ணாத்துரை கூறியுள்ளார்.
 
Edited by Siva