1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Bjp says to change madurai periyar bus stand name

மதுரை பெரியார் பஸ் நிலையத்துக்கு மீனாட்சி அம்மன் பெயர்: பா.ஜனதா கோரிக்கை

Bjp
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு மீனாட்சி அம்மன் பெயர் வைக்க வேண்டும் என பாஜக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
மதுரையில் பாஜக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பஸ் நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தீர்மானம் ஏற்றப்பட்டு உள்ளது. 
 
அதேபோல் மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் பேருந்து நிலையத்திற்கு திருவள்ளுவர் பெயரை சூட்ட வேண்டும் என்றும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலை அமைத்துக் கொடுத்த வாஜ்பாய்க்கு மதுரையில் வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்றும் தீர்மானங்களை இயற்றப்பட்டன. 
 
மேலும் பிரதமர் மோடியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மோடியின் படத்தை வைக்காத மதுரை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தீர்மானம் ஏற்றப்பட்டது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் கமிஷன்!