திமுகவின் தேர்தல் ஆஃபரை உதறிய பாஜக !!
திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் வரவேண்டும் என இந்த அழைப்பு விடுக்கப்பட்டதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த நிலையில் அவரது ராஜினாமா குடியரசுத் தலைவரால் ஏற்கப்பட்டது. எதிர்க்கட்சிகளும் புதுச்சேரியில் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என அறிவித்ததை அடுத்து புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
அடுத்தடுத்து எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ததால் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை நிரூபிக்க தவறி ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு திமுக மாவட்ட செயலாளர் நாஜிம் அழைப்பு விடுத்துள்ளார்.
அதாவது, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மதச்சார்பற்றவர்கள் ஒன்றிணைய திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் வரவேண்டும் என இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மக்கள் நலன் கருதி ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருப்பார். திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.