குட்டித்தீவுகளில் திமுக பிரபலங்களின் சொத்துக்கள் பதுக்கலா?

Last Modified வியாழன், 10 அக்டோபர் 2019 (22:04 IST)
வரும் 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த தேர்தல் வருவதற்கு முன்னரேயே திமுகவின் இமேஜை தவிடு பொடியாக்க வேண்டும் என்று மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

குறிப்பாக ஸ்டாலின் மருமகன் சபரீசன் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் எந்தெந்த நாடுகளுக்கு செல்கிறார்? எதற்காக செல்கிறார்? என்னென்ன செய்கிறார் என்பது குறித்த அறிக்கைகள் அவ்வப்போது பாஜக மேலிடத்திற்கு சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது

சமீபத்தில் ஹங்கேரி, ஆஸ்திரேலியா, லண்டன் மட்டுமின்றி ஒருசில குட்டி தீவுகளுக்கும் சபரீசன் விசிட் அடித்திருக்கின்றாராம். அந்த குட்டி தீவுகளில் பிரபலங்களின் சொத்துக்கள் மற்றும் பணங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஒரு சந்தேகம் உள்ளதாம்.

இது குறித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாகவும், விசாரணையின் முடிவில்
பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்றும், அதை வைத்து திமுகவை சிக்கலில் மாட்டி விடலாம் என்று
பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும்


இதில் மேலும் படிக்கவும் :