1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified செவ்வாய், 22 நவம்பர் 2022 (12:56 IST)

பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை: சூர்யா சிவாவுக்கு அண்ணாமலை உத்தரவு

surya siva
பாஜகவின் பொறுப்புகளிலிருந்து காயத்ரி ரகுராம் ஆறுமாத காலத்திற்கு நீக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக சூர்யா சிவா பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்து அண்ணாமலை உத்தரவு போட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாஜகவின் பெண் நிர்வாகியை சூர்யா சிவா மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்து அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கை சமர்ப்பிக்கும் வரை ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
 
ஒரே நாளில் காயத்ரி ரகுராம் மற்றும் சூர்யா சிவா ஆகிய இருவர் மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அக்காட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran