கிறிஸ்துவர் போட்டியிட்டபோது திருமாவளவன் ஆதரவு அளிக்காதது ஏன்? பாஜக பிரபலம் கேள்வி
சமீபத்தில் ஒரு கிறிஸ்தவர் தான் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட வேண்டும் என திருமாவளவன் தெரிவித்த நிலையில் கிறிஸ்தவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டபோது திருமாவளவன் ஏன் ஆதரிக்கவில்லை என பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
2012ல் அதே வட கிழக்கு மாநிலத்தை சேர்ந்த கிறித்தவர் பி.ஏ.சங்மா அவர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டபோது மக்களவை உறுப்பினராக இருந்த திருமாவளவன் அவர்கள் சங்மா அவர்களுக்கு வாக்களிக்கவில்லையே ஏன்? ஆதரவு தர மறுத்தது ஏன்? அப்போது ஒரு கிறித்தவர் ஜனாதிபதியாக வேண்டும் என்று உருகவில்லையே, ஏன்? இப்போது கிறித்தவர்கள் மீது வந்துள்ள பாசம் அப்போது இல்லாமல் போனது ஏன்?
அரசியலில் மதத்தை கலக்கும் திருமாவளவனின் அறிக்கை கிறித்தவ மதத்தின் மீதான அவரின் போலி பாசத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அரசியலில் மதத்தை கலக்கும் அநாகரீக அரசியலை திருமாவளவன் அவர்கள் கைவிட வேண்டும் திருமாவளவன் அவர்கள் 2012ல் ஜனநாயகத்துக்கு பெருமை சேர்க்காதது ஏன்?