செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 14 ஜூன் 2022 (11:59 IST)

ஜனாதிபதி வேட்பாளராக கிறித்தவரை நிறுத்துங்கள்: திருமாவளவன்

Thirumavalavan
ஜனாதிபதி வேட்பாளராக கிறிஸ்துவரை நிறுத்துங்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ள நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 17ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது 
 
இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனது ஆதரவு கட்சிகளுடன் வேட்பாளரை நிறுத்தும் என்றும் அந்த வேட்பாளருக்கு எதிராக பொது வேட்பாளரை அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து நிறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஜனாதிபதி வேட்பாளர் பற்றி கூறும்போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்றும் கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்துவது வெறுப்பு அரசியலுக்கு எதிரான மாற்று நடவடிக்கையாக அமையும் என்றும் கூறியுள்ளார்