செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2021 (09:55 IST)

முகமது நபியை கேவலமாக பேசிய பாஜக பிரமுகர்! – கைது செய்து நடவடிக்கை!

இஸ்லாமிய இறைதூதரான முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது தேசிய கட்சிகளும் தேர்தலில் கவனம் செலுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் என்பவர் இஸ்லாமிய இறைதூதரான முகமதுநபி குறித்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் கல்யாணசுந்தரம் மற்றும் இரு பாஜகவினரை கைது செய்து அவிநாசி கிளை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.