இன்று முதல் 2 ஜிபி இலவச டேட்டா! – புதிய திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்காக இலவச 2 ஜிபி டேட்டா திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதலாக கல்லூரிகள் செயல்படாமல் இருந்து வந்தன. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் மாணவர்கள் ஆன்லைனில் படிப்பதற்கு ஏதுவாக நாளொன்றுக்கு இலவசமாக 2 ஜிபி டேட்டா வழங்க இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
தற்போது அளிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வின் படி பிப்ரவரி 8 முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. எனினும் மாணவர்களுக்கு அறிவித்தபடி 2 ஜிபி இலவச டேட்டா திட்டத்தை இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் மாணவர்களுக்கு ஏப்ரம் மாதம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.