புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 31 ஜனவரி 2021 (15:31 IST)

அள்ளி தெளிக்கும் கோலம்.. அவசரக்கோலம்! – மினிகிளினிக் சம்பவம்; கமல் நையாண்டி ட்வீட்!

கரூர் அம்மா மினி க்ளினிக் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்க சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் சில நாட்கள் முன்னதாக பல பகுதிகளில் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. மேலும் பல இடங்களில் மினி கிளினிக்குகள் கட்டி தொடங்கி வைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கரூரில் கட்டப்பட்ட மினி கிளினிக் திறப்பு விழாவின்போதே இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் “கரூரில், திறப்பு விழாவின்போதே இடிந்துவிழுந்திருக்கிறது அம்மா மினி க்ளினிக் சுவர். மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா? அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலத்தால் ஏற்படும் அலங்கோலம்தானே இது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.