கையில் வேலுடன் பாஜகவை கலாய்த்த உதயநிதி!!
கொரோனா காலத்திலும் கொள்ளையடித்த ஆட்சி இந்த அதிமுக ஆட்சி தான் என உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில்யில் நடந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலினிடம் வேல் கொடுக்கப்பட்டது. இதனை மறுக்காமல் வாங்கிக்கொண்ட உதயநிதி பின்னர், பாஜகவிடமிருந்த வேலையும் பிடிங்கி விட்டீர்கள் என்று சொல்லி சிரிக்க ஆரம்பித்தார்.
மேலும் அவர், கொரோனா காலத்திலும் கொள்ளையடித்த ஆட்சியென்றால் இந்த அதிமுக ஆட்சிதான். மாஸ்க் என்று கொசு வலை கொடுத்தனர். அதிமுக, பாஜக பெயரை சொன்னாலே அசிங்கம் அசிங்கமாக திட்டுகின்றனர். சசிகலா வந்ததும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆப்பு இருக்கிறது என பேசினார்.