1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (14:33 IST)

இரணியல் பேரூராட்சியை கைப்பற்றிய பாஜக! – ட்ரெண்டாகும் நாங்க வந்துட்டோம்னு சொல்லு!

கன்னியாக்குமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சியில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக, பாஜக, மநீம, நாதக, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. தற்போது உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கன்னியாக்குமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சியில் பல பகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மேலும் சில பேரூராட்சிகளிலும் அதிக வார்டுகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் பாஜக வெற்றி பெற்று வருவதை கொண்டாடும் வகையில் பாஜகவினர் #நாங்க_வந்துட்டோம்னு_சொல்லு என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.