திங்கள், 16 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 பிப்ரவரி 2026 (11:15 IST)

ரெப்போ வட்டிவிகிதத்தில் மாற்றமில்லை.. EMI வாங்கியவர்களுக்கு என்ன தாக்கம் ஏற்படும்?

ரெப்போ வட்டிவிகிதத்தில் மாற்றமில்லை.. EMI வாங்கியவர்களுக்கு என்ன தாக்கம் ஏற்படும்?
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு, 2026-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றமின்றி 5.25 சதவீதமாகவே தொடர ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. இது பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமைந்துள்ளது. 
 
உள்நாட்டு தேவை வலுவாக இருப்பதால், 2026 நிதியாண்டில் இந்தியாவின் GDP 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் தற்போது 2.1 சதவீதம் என்ற நிம்மதியான நிலையில் உள்ளது.
 
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய வர்த்தக ஒப்பந்தங்கள் இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரித்துள்ளன. இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 723.8 பில்லியன் டாலர்களை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது. 
 
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் பங்குச்சந்தையில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை; நிஃப்டி 50 குறியீடு 0.17 சதவீதம் மட்டுமே சரிந்தது. வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் கட்டுக்குள் இருக்கும் பணவீக்கம் ஆகியவை இந்தியப் பொருளாதாரம் சரியான பாதையில் செல்வதை காட்டுகின்றன. 
 
வட்டி விகிதம் மாற்றப்படாததால், வீட்டுக்கடன் மற்றும் வாகன கடன்களுக்கான EMI தற்போதைக்கு அதிகரிக்காது என்பது சாமானிய மக்களுக்கு நிம்மதியளிக்கும் செய்தியாகும்.
 
Edited by Siva