1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (13:00 IST)

பெரியார் சிலை அவமதிப்பது: கமல், வைரமுத்து கடும் கண்டனம்!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் கவிஞர் வைரமுத்துவும் பெரியார் சிலையை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 
பெரியார் சிலையை அவமதிப்பது தமிழகத்தில் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் கோவையில் வெள்ளலூர் பகுதியில் உள்ள தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகத்தின் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, காவி பொடி தூவி விடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் இது குறித்து முன்னதாக குஷ்பூ கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் கவிஞர் வைரமுத்துவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது... 
 
வைரமுத்து ட்விட்: 
எதிர்ப்பு வடிவத்தைக் கற்றுக் கொடுத்தவரே பெரியார்தான்.  பெரியாரை அவமதிக்கிறவர்களுக்கும் பெரியார் தான் ஆசான். 'வாழ்க வசவாளர்கள்' என்றார் அண்ணா 'சிறப்புறுக செருப்பாளர்கள்' என்போம் நாம். 
 
கமல் ட்விட்: 
ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும், வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்த மட்டுமே முடியும். அவமானப்படுத்த முடியாது.