திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (11:09 IST)

விக்கிற விலைவாசியில..! 24 கிலோ வெள்ளி செங்கல் நன்கொடை!

பொருளாதார மந்தநிலையால் தொடர்ந்து தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வரும் நிலையில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகளுக்காக கிலோ கணக்கில் வெள்ளி செங்கல் அளிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் துரிதமாக தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக ராமர் கோவில் கருவறை பகுதியில் அமைப்பதற்கு வெள்ளி செங்கற்களை இந்திய தங்க சங்கம் நன்கொடையாக அளித்தது. அதை தொடர்ந்து ஜெயின் சமூக மக்கள் சார்பாக தற்போது மேலும் 24 கிலோ செங்கல் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளைய தினம் அடிக்கல் நாட்டு விழாவின் போது ஆயிரக்கணக்கான மந்திரங்களை ஓதி ராமர் கோவில் கட்டும் பணி நிறைவடைய பிரார்த்திப்போம் என்றும் ஜெயின் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.