திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 1 ஜூலை 2023 (21:00 IST)

பாஜகவினர் கூட்டணி தொடர்பாக எங்களுடன் பேசி வருகின்றனர்-ஒபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி தரப்புடன் மீண்டும் இணையும் வாய்ப்பே இல்லை என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
 

சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அணியினரின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம்,  ’’எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை. ஒருமுறை இணைந்ததற்கே அவர்கள் கற்பித்து விட்டனர்’’ என்று கூறினார்.

மேலும், ’’ கொங்கு மண்டல மாநாடு உறுதியாக நடைபெறும். இதற்கான தேதி அறிவிக்கப்படும்.  பாஜகவினர் கூட்டணி தொடர்பாக எங்களுடன் பேசி வருகின்றனர். அமைச்சரை நீக்கும் அதிகாரம் உள்ளாத இல்லையா என்பது குறித்து ஆளுநருக்கே தெரியவில்லை’’ என்று கூறினார்.