வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 1 ஜூலை 2023 (08:45 IST)

மாமன்னன் பட வில்லன் எடப்பாடி பழனிசாமியா? – சிரித்து வைத்த உதயநிதி!

Mamannan
உதயநிதி, வடிவேலு நடித்து வெளியாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தில் வரும் வில்லன் கதாப்பாத்திரம் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என பேசப்படும் யூகங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ரியாக்ட் செய்துள்ளார்.



வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் நடித்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் மாமன்னன். இந்த படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த கதையில் வடிவேலும் ரிசர்வ்ட் தொகுதி ஒன்றின் சட்டமன்ற உறுப்பினராக நடித்துள்ளார்.

இது அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் பற்றிய கதை என்று சமூக வலைதளங்களில் பேசிக் கொள்ளப்பட்டது. இந்த படத்தில் வில்லனாக வரும் பகத்பாசில் வடிவேலுவின் தொகுதி உள்ள மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக வருகிறார்.

Udhayanithi stalin


இதை ஒப்புமைப்படுத்தி பேசியுள்ள சிலர் இது முன்னாள் சபாநாயகரின் கதை என்றால் அப்போது மாவட்ட செயலாளராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமிதான். அவர்தான் கதையின் வில்லனா என்ற ரீதியில் பதிவுகளை இட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வரும் இந்த கற்பனையான யூகத்தை ரீட்வீட் செய்த உதயநிதி ஸ்டாலின் அதற்கு சிரித்து ரியாக்ட் செய்துள்ளார். இந்த ட்வீட் வைரலாகியுள்ளது.

Edit by Prasanth.K