வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 1 ஜூலை 2023 (13:17 IST)

புதிய தலைமைச் செயலாளருக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

தமிழகத்தின் 49 வது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவை  நியமித்து நேற்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.  நேற்றுடன் பணி ஓய்வு பெற்ற  தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று இந்த உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில்  சவால்களை முறியடித்து அரசு நிர்வாக எந்திரத்தை முன்னெடுத்துச் செல்லவும், சமூகநீதி காக்கும் பணிகளை மேற்கொள்ளவும் என்று பதிவிட்டு,  புதிய தலைமைச் செயலாளருக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:

‘’தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள  சிவதாஸ் மீனா அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இராஜஸ்தான் மாநிலத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த அவர், தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக  உயருவதற்கு அவரது நிர்வாகத் திறமையே காரணம். நெருக்கடியான சூழல்களை திறம்பட சமாளிப்பதில் அவர் சிறந்தவர் என்பதற்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சிறப்பு அதிகாரியாக அவர் ஆற்றிய பணிகளே சான்று. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பொறுப்பிலும் அவருக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன.  சமூகநீதியை நிலைநாட்டுதல், முக்கிய சிக்கல்களில் கொள்கை முடிவுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்து சவால்களிலும் வென்று முத்திரைப் பதிக்க வாழ்த்துகிறேன்.’’ என்று தெரிவித்துள்ளார்.