வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 29 டிசம்பர் 2023 (13:22 IST)

பாஜகவினர் நிவாரண பணிகளில் ஈடுபடவில்லை- திருமாவளவன் குற்றச்சாட்டு

சமீபத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, சென்னை ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையான பாதிக்கப்பட்டன.
 

இங்கு பெய்த வரலாறு காணாத மழையால் கடும் வெள்ளம் சூழ்ந்து, குடியிருப்புகளை விட்டு மக்கள் வெளியேறி பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

தமிழக அரசு துரிதமாகச் செயல்பட்டு மக்களை காப்பாற்றியதுடன் தேவையான அத்தியாவசிய உதவிகள் செய்து கொடுத்தது.

இதேபோல், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய  தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர்.

எனவே தமிழக அரசு மத்திய அரசிடம் நிவாரண உதவி கேட்டுள்ளது.
nirmala sitharaman

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாதிக்கப்பட்ட மக்களை வெறுங்கையோடு பார்த்துவிட்டு சென்றுள்ளார் என்று இன்று தூத்துக்குடியில்  விசிக தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியின்போது பாஜக மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:  மிகவும் பாதிக்கப்பட்ட ஏரல், காயப்பட்டினம், ஆகிய பகுதிகளை அவர் பார்வையிடவில்லை. வெள்ளம் பாதித்த பகுதிகளில் பாஜகவினர் எவ்வித நிவாரண பணிகளிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார்.