1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 28 டிசம்பர் 2023 (14:32 IST)

விஜயகாந்தின் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த படங்கள்!

vijayakanth
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர் விஜயகாந்த். இவர் ஆக்சன் காட்சிகளில் டூப் போடாமல் தானாகவே நடித்து, அதனை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தவர்.

அவர் ஆக்சன் காட்சிகளில் நடித்தபோது, உடலை பிட்டாக வைத்துக் கொண்டதுடன் முன்னங்காலை தூக்கி பின்னங்காலால்  உதைப்பது அவரது தனி அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.

போலீஸ் படங்கள், தேசபக்தி படங்களுக்கு இன்றும் முன்னுதாரணமாக பார்க்கப்படுவது விஜயகாந்த் படங்கள்.

காக்கிச் சட்டை அணிந்த போலீஸுக்கு தனி மரியாதையை ஏற்படுத்தியது விஜயகாந்த் படங்கள் என்றால், அவரது கிராம படங்கள் உள்ளிட்டவை பட்டிதொட்டி எல்லாம் பேசப்பட்டது.
.
விஜயகாந்த் நடிப்பில் அதிக நாட்கள் ஓடிய படங்கள்:

1991 சின்ன கவுண்டர்-  315 நாட்கள்
1991 கேப்டன் பிரபாகரன்  300 நாட்கள்
1991 மா நகர காவல் – 200 நாட்கள்
1990- புலன் விசாரணை -200 நாட்கள்
1988- பூந்தோட்ட காவல்காரன் -180 நாட்கள்
1988 –செந்தூரப்பூவே -186 நாட்கள்
2000- வானத்தைப் போல 175 நாட்கள்
1986 -ஊமை விழிகள்-200 நாட்கள்
1986  - அம்மன் கோயில் கிழக்காலே 175 நாட்கள்
2000-வல்லரசு 112 நாட்கள்
2002 -ரமணா -150 நாட்கள்,
1984 -வைதேகி காத்திருந்தாள்- 175 நாட்கள்