1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Bihar education minister resigns today

பதவியேற்ற மூன்றே நாளில் ராஜினாமா செய்த கல்வித்துறை அமைச்சர்

மேவாலால் சவுத்ரி
பீகார் மாநிலத்தில் கல்வித் துறை அமைச்சராக கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பதவி ஏற்றுக்கொண்ட மேவாலால் சவுத்ரி என்பவர் தற்போது ராஜினாமா செய்துள்ளார் 
 
கல்வி அமைச்சர் மேவாலால் சவுத்ரி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருப்பதாகவும் இதனால் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பதையும் இன்று காலை பார்த்தோம் 
 
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் நெருக்கடி காரணமாக முதல்வரிடம் ஆலோசனை செய்த பின் கல்வி அமைச்சர் பதவியை மேலால் சவுத்ரி சற்றுமுன் ராஜினாமா செய்துள்ளார். மேலும் ஒரு கல்வி அமைச்சராக இருந்த மேவாலால் சவுத்ரி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, தேசிய கீதத்தை சரியாக பாடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவர் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
About Writer
siva