திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 19 நவம்பர் 2020 (16:12 IST)

அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்ட மாட்டோம்: கே.எஸ்.அழகிரி

தமிழகம் வரும் அமித் ஷாவுக்கு கருப்புக்கொடி காட்ட மாட்டோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் பேட்டி கொடுத்துள்ளார் 
 
உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வரும் 21ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். சென்னையில் அவர் தமிழக பாஜக தலைவர்களுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவார் என்றும் ரஜினிகாந்தை அவர் சந்திப்பார் என்றும் முக அழகிரி பாஜகவில் சேரும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
மேலும் பீகார் மாநிலத்தை அடுத்து அமித்ஷாவின் பார்வை தமிழகத்தில் மீது பட்டுள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் ’கோ பேக் மோடி’ என்ற வாசகங்களுடன் கருப்புக்கொடி காட்டி வரும் திமுக காங்கிரஸ் கட்சியினர் இந்த முறை அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்ட மாட்டார்கள் என்று செய்திகள் வெளியானது 
 
இதனை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் இன்று பேட்டி அளித்தபோது ’அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் பாட்டுக்கு வரட்டும், போகட்டும் என்றும், மதவாத அரசியல் செய்யும் கட்சி பாஜக என்றும் காங்கிரஸ் செய்வது கொள்கை ரீதியான அரசியல்’ என்றும் அவர் தெரிவித்தார்