1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 நவம்பர் 2020 (10:55 IST)

அறிக்கை நாயகனே... எதிர்கட்சிங்கர பதவியாச்சு தக்க வச்சிகோங்க - ஈபிஎஸ்!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அறிக்கை நாயகன் என பட்டப்பெயர் வைத்துள்ளார். 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இந்நிலையில் இன்னமும் கூட்டணிகளே முடிவாகாத நிலையிலும் திமுக தனது தேர்தல் பிரச்சார பணியை தொடங்கிவிட்டது.
 
இதற்கிடையே திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுகவின் செயல்களை விமர்சித்து அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அறிக்கை நாயகன என பட்டப்பெயர் வைத்துள்ளார். 
 
இது குறித்து அவர் கூறியதாவது, என்னைப் பற்றியே மு.க.ஸ்டாலின் தினந்தோறும் பேசிவருகிறார். அறிக்கைவிட்டு அறிக்கைவிட்டு அறிக்கை நாயகனாக உருவெடுத்துள்ளார். அரசின் மீது குறை சொல்லாமல் ஆக்கப்பூர்வமான முறையில் செயல்பட்டு எதிர்க்கட்சி வரிசையிலாவது ஸ்டாலின் அமர முயற்சி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.