செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 13 ஜனவரி 2021 (12:33 IST)

#ஓசி_சிக்கன்ரைஸ்_பாஜக: டிவிட்டரில் பங்கம்!!

#ஓசி_சிக்கன்ரைஸ்_பாஜக என்ற ஹேஷ்டேக் சமூகவலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 

 
சென்னை திருவெல்லிக்கேணியில் உள்ள அசைவ உணவகம் ஒன்றில் பாஜகவை சேர்ந்த புருசோத் என்பவர் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார். அதற்கு கடைக்காரர் காசு கேட்டபோது காசு தர மறுத்ததுடன், தான் பாஜக ஆள் என்றும், அமித்ஷாவிற்கு போன் செய்து காலி செய்துவிடுவேன் என்றும் மேலும் பல அநாகரிகமான வார்த்தைகளாலும் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வெறும் ஒரு சிக்கன் ரைஸுக்காக அமித்ஷா வரை இழுத்து விடுகிறாரே இவர் என பாஜகவினரே குறைப்பட்டு கொண்டுள்ள நிலையில் குறிப்பிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் குரல்கள் எழுந்துள்ளன. அதோடு, #ஓசி_சிக்கன்ரைஸ்_பாஜக என்ற ஹேஷ்டேக் சமூகவலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.