பொங்கல் ஹேப்பியா கொண்டாடுங்க... இன்று இரவு முதல் மழை படிப்படியாக குறையும்!

Papiksha Joseph| Last Updated: புதன், 13 ஜனவரி 2021 (08:42 IST)

இன்று இரவு முதல் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து குமரிக்கடல் பகுதியில் நீடிக்கிறது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இன்று இரவிலிருந்து மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :