வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 21 அக்டோபர் 2023 (19:38 IST)

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கைது

சென்னை, பனையூரில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன் பாஜகவின் கொடிக்கம்பம் நிறுவப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அண்ணாமலை வீட்டின் முன் கொடிக்கம்பம் நிறுவப்படுவது இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறியதோடு, கொடிக்கம்பம் நிறுவப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள்  போராட்டம் நடத்தினர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

போராட்டத்தை கண்டித்து பாஜகவினர்  எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கொடிக்கம்பம் நிறுவப்படுவதற்கு எந்தவிதமான தீங்கும் இல்லை என்றும், இது ஒரு சாதாரண விஷயம் என்றும் பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக கொடிக்கம்பட்தை அகற்ற வந்த ஜே.சி.பி வாகனத்தைத் தாக்கி, கண்ணாடியை உடைத்த வழக்கில் பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 
மேலும். இவர் பண மோசடி வழக்கில் கைதாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.