புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 அக்டோபர் 2023 (07:15 IST)

ஆயுதபூஜையையொட்டி நெல்லை - சென்னை இடையே சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

Train
ஆயுதபூஜையையொட்டி நெல்லை - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
 
சென்னையில் இருந்து இன்று இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு நாளை காலை 9.45 மணிக்கு நெல்லை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து 24ம் தேதி மாலை 5.35 மணிக்கு புறப்பட்டு 25ம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு சென்னை சென்றடையும். 
 
ஆயுதபூஜையையொட்டி தெற்கு ரயில்வே  இயக்கும் இந்த சிறப்பு ரயிலை தென்மாவட்டங்கள் செல்லும் பயணிகள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
 
இந்த ரயில் குறித்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் முன்பதிவு முடிந்து தற்போது வெயிட்டிங் லிஸ்ட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva