வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2023 (11:38 IST)

நடிகை ஜெயப்ரதாவுக்கு 6 மாத சிறை தண்டனை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா, 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து ரூ.20 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
திரையரங்கு ஊழியர்களிடம் வசூலித்த இ.எஸ்.ஐ. தொகையை செலுத்தாதது தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
ஜெயப்ரதாவுக்கு சொந்தமான சென்னை திரையரங்கத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஈஎஸ்ஐ தொகையை முறையாக கட்டவில்லை என அவர் மேல் வழக்குத் தொடரப்பட்டது.
 
இந்த வழக்கு விசாரணை சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் அவரது குற்றம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் 6 மாத காலம் சிறை தண்டை விதித்தது. இந்த நிலையில் நடிகை ஜெயப்ரதா, 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து ரூ.20 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
Edited by Mahendran