1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 21 அக்டோபர் 2023 (17:24 IST)

ஓடும் பைக்கில் லேப்டாப்பில் வேலை செய்யும் இளம்பெண்.. வீடியோ வைரல்..!

பைக்கில் பின்னால் உட்கார்ந்து செல்லும் இளம் பெண் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருக்கும்போதே லேப்டாப்பில் வேலை செய்தது வேலை செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
பெங்களூரில் ஐடி துறையில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் தனது நண்பருடன் பைக்கில் சென்று கொண்டிருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.  
 
இந்த வீடியோவில் அவர் பைக்கில் சென்று கொண்டிருக்கும்போதே லேப்டாப்பை திறந்து பணி செய்து கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை ஒருவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு  பெங்களூரில் மட்டும் என்று டைட்டிலில்  வைரல் ஆகி வருகிறது. 
 
அந்த பெண் பைக்கில் செல்லும் போது கூட கவனத்துடன் தனது லேப்டாப்பில் பணிந்து கொண்டிருப்பது பார்க்கும்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருவதாக பலர் கமெண்ட்ஸ்களில் பதிவு செய்து வருகின்றனர். 
 
சிலர் பெங்களூரு டிராபிக்கில் நீண்ட நேரம் செலவாகுவதால் அந்த நேரத்தை மிச்சப்படுத்த லேப்டாப்பில் அந்த பெண் வேலை செய்திருக்கலாம் என்றும் கமெண்ட் அளித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran