கரூரில் பாஜக ஆலோசனை கூட்டம்
கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆய்வு கூட்டம் சட்டமன்ற தொகுதி வாரியாக கரூர் மாவட்ட தலைவர் V.V.செந்தில்நாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சேலம் கோபிநாத் அவர்களும் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறுவதற்கு வியூகங்கள் வகுக்கப்பட்டது.
இதில் மண்டல் தலைவர்களும் சக்தி கேந்திர பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் சக்திவேல் முருகன் வரவேற்புரையும் மாவட்டத் துணைத் தலைவர் செல்வம் நன்றியுரையும் வழங்கினர்.