1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2022 (22:16 IST)

பாஜகவின் , கரூர் சட்டமன்ற தொகுதி சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம்.

karur
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின்,  கரூர் சட்டமன்ற தொகுதி சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் கரூர் மாவட்ட கட்சி அலுவலகத்தில்  இன்று காலை  30.11.2022, புதன்கிழமை காலை  நடைபெற்றது.
 
மாவட்ட தலைவர் திரு. V.V.செந்தில்நாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் மற்றும் கரூர் சட்டமன்ற தொகுதி சக்தி கேந்திர பொறுப்பாளர் சக்திவேல் முருகன் வரவேற்புரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் மற்றும் கரூர் சட்டமன்ற தொகுதி சக்தி கேந்திர துணை பொறுப்பாளர் செல்வன் அவர்கள் நன்றியுரை கூறினார்.
 
இக்கூட்டத்தில் கரூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், சேலம் மேற்கு மாவட்ட பார்வையாளருமான R.B. கோபிநாத் அவர்களும், கரூர் மாவட்ட பார்வையாளர் S.A.சிவசுப்பிரமணியன் அவர்களும், கலந்துகொண்டு,  கரூர் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற வேண்டுமானால் பூத் கமிட்டி வலிமையாக இருக்க வேண்டும்.
 
எனவே பூத் கமிட்டியை கரூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் அமைத்து வலிமை மிக்க கரூர் சட்டமன்ற தொகுதியாக மாற்றி, பாராளுமன்ற தேர்தலை வலிமையாக எதிர்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்கள்.
 
கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து மண்டல் தலைவர்கள் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.