1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 10 பிப்ரவரி 2022 (08:36 IST)

பாஜக வடிவில் ஆங்கிலேயர்கள் மீண்டும் திரும்பிவிட்டனர்: லாலு பிரசாத் யாதவ்

பாஜக வடிவில் ஆங்கிலேயர் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர் என முன்னாள் பீகார் மாநில முதல் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா உள்நாட்டு கலவரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என குற்றஞ்சாட்டினார் 
 
மேலும் 70 ஆண்டுகளுக்கு முன்னர் நமது முன்னோர்கள் ஆங்கிலேயர்களை விரட்டினர் தற்போது பாஜக வடிவில் ஆங்கிலேயர்கள் மீண்டும் திரும்பி வந்து விட்டதால் பாஜகவை விரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று லாலு பிரசாத் யாதவ் பேசினார்.
 
 லாலு பிரசாத் யாதவ்வின் இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது பேச்சுக்கு ஆதரவு, எதிர்ப்பு கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.