1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. BJP complaint against Saidai Sadik

நடிகை குஷ்பு குறித்து அவதூறு பேச்சு: திமுக பேச்சாளர் மீது பாஜக மகளிரணி புகார்

kushboo
நடிகை குஷ்பு உள்பட பாஜக நிர்வாகிகளை அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக மகளிரணி அமைப்பு காவல்துறையில் புகார் அளித்துள்ளது 
 
திமுக பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் குஷ்பு, காயத்ரி ரகுராம், நமீதா உள்பட ஒரு சிலரை அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது 
 
மேலும் குஷ்பு குறித்து ஆபாசமாகவும் அவதூறாகவும் முகநூல் பக்கத்திலும் அவர் பதிவு செய்ததாக கூறப்படுகிறது
 
இதனை அடுத்து சைதை சாதிக் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக மகளிரணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இந்த புகாரை ஆய்வாளர் ஏற்றுக்கொண்டு விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி
 
ஏற்கனவே குஷ்பு குறித்து அவதூறாக பேசியதற்கு கனிமொழி வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
100க்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய குஜராத் பாலம்: 9 பேர் அதிரடி கைது!