வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (16:21 IST)

சில விஷயங்களை சொல்ல வேண்டாம் என நினைத்தேன், ஆனால் வேறு வழியில்லை: அண்ணாமலை

Annamalai
கோவை கார் சிலிண்டர் குண்டுவெடிப்பில் சில விஷயங்களை சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன் என்றும் ஆனால் தற்போது வேறு வழி இல்லை இன்னும் இரண்டு மணி நேரத்தில் அனைத்தையும் சொல்ல போகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
 
சமீபத்தில் கோவையில் காஸ் சிலிண்டர் வெடிவிபத்து நடந்த நிகழ்வில் அண்ணாமலை காவல் தமிழக காவல்துறை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்
 
இதற்கு தமிழக காவல்துறை பதிலளித்து இருந்தது. அண்ணாமலை தேவையில்லாமல் மக்களை பதற்றம் அடைகிறார் என்றும் அண்ணாமலை சொல்வதிலும் உண்மை இல்லை என்றும் தெரிவித்திருந்தது
 
இந்த நிலையில் இன்னும் இரண்டு மணிநேரங்களில் காவல் துறை வெளியிட்ட அறிக்கைக்கு வரிக்கு வரி பதில் சொல்ல போகிறேன் என்றும் எங்கள் அறிக்கையில் சொல்ல வேண்டாம் என நினைத்து அந்த விஷயங்களும் இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
அண்ணாமலை அப்படி என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva