சீமான் பேச்சை கேட்டு சிரிப்போம், சீரியஸாக்க வேண்டாம்: அண்ணாமலை
சீமான் பேச்சை கேட்டு சிரித்துக் கொள்வோம், அதனை சீரியசாக எடுக்க வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் கேடி ராகவன் வீடியோ சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடியோ எடுத்து வெளியிட்டவர்தான் குற்றவாளி என்றும் அவரை முதலில் பிடித்து ஜெயிலில் போட வேண்டும் என்றும் தெரிவித்தார்
இதனையடுத்து சீமான் பாஜகவின் பி டீம் என பலர் விமர்சனம் செய்தனர். பாஜகவுக்கு ஆதரவாக திடீரென சீமான் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து கூறியுள்ளார்
சீமானின் பேச்சை கேட்டு சிரிப்போம், அதனை சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்றும், சீமான் எதற்கு எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். அண்ணாமலையின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது