வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By mahendran
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (16:32 IST)

தடையை மீறி விநாயகர் சிலைகளை வைப்போம்… அர்ஜுன் சம்பத் ஆவேசம்!

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் விநாயகர் சதுர்த்தி கண்டிப்பாக கொண்டாடுவோம் என ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. தமிழ்நாட்டில் வருகிற செப்யம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் கொண்டாட்டங்களிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

அதில் செப்டம்பர் 10 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவும் அடங்கும். ஆம், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  ஆனால் இதற்கு பாஜக உள்ளிட்ட இந்துத்வ கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் ‘10 ஆம் தேதி தடையை மீறி ஊர்வலம் செல்வோம். டாஸ்மார்க் கடையில் கூட்டம் கூடினால் கொரோனா வரவில்லையா? கோயிலில் செய்யும் யாகங்களால் கொரோனா ஓடிவிடும்.’ எனக் கூறியுள்ளார்.