திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (20:45 IST)

திமுக ஆட்சியை விநாயகரே முடித்து வைப்பார்: பாஜக தலைவர் அண்ணாமலை!

விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த திமுக அரசு தடை விதித்தால் விநாயகரே திமுக ஆட்சியை முடித்து வைப்பார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருந்தாலும் ஒரு சிலவற்றிற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்ய அனுமதி கிடையாது என தமிழக அரசு சமீபத்தில் தெரிவித்துள்ளது 
 
இதற்கு பாஜக மற்றும் இந்து முன்னணி உள்பட ஒரு சில அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை கையிலெடுத்து திமுக அரசியல் செய்ய நினைத்தால் திமுக ஆட்சி முடிவுக்கு வர விநாயகரே காரணமாக இருப்பார் என்று கூறியுள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது