வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 27 ஜூன் 2019 (08:30 IST)

அமமுகவில் விழும் 16 விக்கெட்டுக்கள்: தினகரன் அதிர்ச்சி

டிடிவி தினகரனை நம்பி வந்த 18 எம்.எல்.ஏக்கள் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக பதவியிழந்த நிலையில் தற்போது அவர்களில் செந்தில் பாலாஜியும் தங்க தமிழ்ச்செல்வனும் பிரிந்துவிட்டனர். அடுத்ததாக மீதியுள்ள 16 முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு குறி வைக்கப்பட்டுள்ளதாம். சரியான யார்க்கர் பந்துகள் வீசி இந்த 16 விக்கெட்டுக்களையும் வீழ்த்த அதிமுக திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு பாஜக தனது அதிகாரத்தை பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
திமுகவை எதிர்க்க வேண்டுமானால் முதலில் தினகரன் கட்சியை அழிக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் முதல் அசைன்மெண்ட்டாம். கடந்த மக்களவை தேர்தலில் அமமுக பிரித்த ஓட்டுக்களால்தான் அதிமுக-பாஜக கூட்டணி பல தொகுதிகளில் தோல்வி அடைந்ததால் முதலில் வீழ்த்த வேண்டியது திமுக அல்ல, அமமுக என்ற முடிவுக்கு வந்துள்ளார்களாம்.
 
இதனையடுத்து அமமுகவின் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் என ஒட்டுமொத்தமாக அணிமாறும் படலம் மிக விரைவில் நடைபெறும் என்றும் தினகரன் அரசியலில் தனிமரமாவது உறுதி என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தினகரனோ, யார் சென்றாலும் செல்லட்டும். நம்முடன் கடைசிவரை யார் இருக்க விரும்புகிறார்களோ அவர்கள் மட்டும் இருக்கட்டும். ஒரே ஒருவர் இருந்தால் கூட தன்னால் கட்சி நடத்த முடியும் என்று கூறி வருகிறாராம்